மட்டக்களப்பு வாகரை புச்சாக்கேணி பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 3 நபர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
புச்சாக்கேணி கிராமத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீடுகளிலிருந்து திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் இயந்திரங்களும் கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
கிராமத்தில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டு வந்த நிலையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு,எம்.விஜேவர்த்தன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் சனிக்கிழமையன்று (7) வாழைச்சேனை மாவட்ட நீதி மன்ற நீதிபதி எம்.எச்.எம். பசில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களை எதிவரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.




