25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

வயிறு தட்டையா ஸ்லிம்மா இருக்க வேண்டுமா? இஞ்சி-சீரகத் தண்ணி உதவும்.

நாம் உடல் எடை அதிகமாக உள்ளது என்று அதிகமாக உடற்பயிற்சி செய்து உடலை குறைத்தால் அங்கு வந்து நிற்கிறது மற்றொரு பிரச்சனை! அதுதான் இந்த சதை போடுதல். கழுத்து, கை, தொடை போன்ற பகுதிகளில் இந்த தேவையற்ற சதை நம்முடைய உடல் அழகை பாதிக்கிறது. பெண்களுக்கு சேலை பேண்ட் போன்ற அணியும்போது நன்றாக இருப்பதில்லை என்றும் வருந்துகின்றனர்.

இஞ்சியில் இருக்கும் நன்மைகள்:

நம்முடைய இந்திய சமையல் அறையில் இஞ்சிக்கு பல்லாயிரம் காலம் தொட்டே பங்கு உள்ளது. அதை பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வாக மருந்தாக பயன்படுத்துகிறோம். மேலும், நாம் சாப்பிடும் மசாலா, எண்ணெய், பிரியாணி போன்ற ஹெவி உணவுகளுக்கு செரிக்கும் தன்மையை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உடலில் இந்த வெப்ப மண்டலப் பகுதியில் உடல் வெப்பத்தை குறைப்பதற்கு இவை பங்கு வைக்கின்றன. அதுமட்டுமின்றி இஞ்சியின் பல்வேறு பலன்கள் உள்ளன

சீரகத்தின் பலன்கள்

சீரகத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பொட்டாசியம், இரும்பு, பைபர் கொண்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மற்றும் விட்டமின் சி, கே மற்றும் பிற உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் சீரகம் நம்முடைய கிச்சனில் பங்கு வகிக்கிறது.

பானம் செய்வது எப்படி?

ஒரு ஸ்பூன் சீரக விதைகளையும் இஞ்சியையும் எடுத்துக் கொள்ளுங்கள். சீரகத்தினை பவுடராக இருந்தாலும் ஒரு ஸ்பூன் எடுக்க அதை இரண்டும் 500 மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்க்கவும். பின் அவற்றை நன்றாக கொதிக்கவைத்து அதாவது 500 மில்லி லிட்டர் தண்ணீரானது பாதியாக 250 மில்லி லிட்டர் தண்ணீர் வரும் அளவிற்கு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அவற்றினை ஒரு டம்ளரில் எடுக்க வேண்டும் உங்களுக்குத் தேவை என்றால் பட்டை, ஏலக்காய் அல்லது கொஞ்சமாக லெமன் ஜூஸ் சேர்த்து சேர்த்துக் கொள்ளலாம். அதன் சுவையை அதிகரிக்க உதவுகிறது. இவற்றினை காலையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் உங்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்படும். மேலும், சரியான டயட் முறை மற்றும் தினமும் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டால் இந்த பானம் நல்ல பலனை அளிக்கும்.

இது எப்படி நமக்கு பயன்படுகின்றது?

நாம் ஏற்கனவே இஞ்சி மற்றும் சீரகத்தின் பயன்கள் பற்றி பார்த்தோம். உங்களுடைய சக்திகளை அதிகரிக்க உங்கள் உடல் எடையை குறைக்க இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்னும் கரையாத கலோரிகளை குறைப்பதில் இவை முக்கிய பங்கு வகிப்பதன் காரணமாக நாம் இதை குடிக்கலாம்

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment