25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
ஆன்மிகம்

ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிக்கும் முறை!

நாளை ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிக்கும் முறை

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அடி அமாவாசை அன்று விரதம் இருந்து நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல்வேறு சிறப்புகளை பெறலாம்.
ஆடி அமாவாசை அன்று ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது நீதிமன்ற ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே எளிய முறையில் வழிபாடு செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த அனைத்து உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்களை துணையாக வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

பிறகு, படைத்த அனைத்து உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகள், காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதற்காக உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்டான பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளை உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதத்திலிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment