24.9 C
Jaffna
January 25, 2025
Pagetamil
கிழக்கு

2 இலட்சம் ரூபா கடனால் நடந்த கொலை: வாழைச்சேனை கொலை மர்மம் துலங்கியது!

வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கடனாக பெற்ற 2 இலட்சம் ரூபாவிற்காகவே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை சந்தேகநபரும், இன்னொரு கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வாழைச்சேனை பகுதியில் வளர்ப்பு மீன் விற்பனை தொழிலில் ஈடுபடுபவர்கள்.

வாழைச்சேனை சந்தையில் நேற்று அந்தப் பெண்ணின் உடல் உரப்பையில் அடைக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

அல்லாபிச்சை வீதி, வாழைச்சேனை 5 என்ற முகவரியை சேர்ந்த முகமது ஹனீபா சித்தி லைலா (58) என்பவரே கொல்லப்பட்டார்.

வாழைச்சேனை சந்தையில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் முன்பாக உரப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சடலம் மீட்கப்பட்டது.

பெண்ணை காணவில்லையென முறையிட சென்றவர்கள் தரப்பில் கொலையாளியும் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில், சம்பவம் தெரிய வந்து, பொலிஸ் நிலையத்திற்குள் வைத்தே கொலையாளி மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

முகமது ஹனீபா சித்தி லைலா

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை வெளியான தகவலின்படி.

கொல்லப்பட்ட சித்தி லைலா என்பவரின் உறவினரான 27 வயதான இளைஞன் ஒருவர் ஓட்டமாவடி பகுதியில் வளர்ப்பு மீன், புறா விற்பனை வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார்.

சித்தி லைலாவிடம் பொருளாதார கஷ்டம் காரணமாக பணம் கடனாக கேட்டுள்ளார். தன்னிடமிருந்த நகைகள் சிலவற்றை அந்தப் பெண் வங்கியில் ஈடு வைத்து, 2 இலட்சம் ரூபா கடனாக கொடுத்துள்ளார்.

கடன் வாங்கி நீண்டகாலமாகியதால், பணத்தை திருப்பி தருமாறு அந்தப் பெண் கோரியுள்ளார். பல முறை கடன் தொகையை கேட்டு, நகையை மீட்கும்படி வங்கியால் வழங்கப்படும் அறிவித்தலையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அந்தப் பெண் சமுர்த்திக் கடனிற்கும் விண்ணப்பித்துள்ளார்.

வேறொருவரை போல அந்த பெண்ணை தொடர்பு கொண்டு. சமுர்த்திக்கடனிற்கு தெரிவாகியுள்ளதாகவும், நேற்று பிரதேச செயலகத்திற்கு வருமாறும், சந்தேகநபரே தகவல் வழங்கியுள்ளார்.

இதனை நம்பி, அந்தப் பெண் நேற்று பிரதேச செயலகத்திற்கு சென்றார். பகல் 12 மணியளவில் அவர் பிரதேச செயலகம் சென்றதாக தெரிய வருகிறது. எனினும் அவரது பெயர் தெரிவாகவில்லையென்பது தெரிய வந்தது.

அங்கு சென்ற சந்தேகநபரான இளைஞர், மூதாட்டியை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார். ஈடுவைத்த நகைகளை மீளப்பெற்றுத்தருவதாக கூறியே அழைத்துச் சென்றார்.

வங்கிக்கு சென்ற பின், ஏதோ ஒரு காரணம் கூறி, அந்த பெண்ணை மீண்டும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு, ஓட்டமாவடியிலுள்ள தனது வர்த்தக நிலையத்திற்கு சென்றார்.

இதேவேளை, தாயை நீண்டநேரமாக காணாததையடுத்து மகள் தேடத் தொடங்கிய போது, பிரதேச செயலகத்தில் இருந்து உறவினரான இளைஞனின் முச்சக்கர வண்டியில் சென்றது தெரிய வந்தது.

அவரிடம், விசாரித்த போது, மதியமே அவரை இறக்கி விட்டதாகவும், பின்னர் நடந்தது தெரியாதென்றும் கூறியுள்ளார்.

உறவினரான அந்த இளைஞனின் முச்சக்கர வண்டியில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று இரவு 7.30 மணியளவில் சென்ற மகள், தனது தாயாரை காணவில்லையென்ற முறைப்பாட்டை பதிவு செய்தார். உறவினரின் முச்சக்கர வண்டியில் சென்ற தகவலையும் வழங்கினார்.

இதற்கிடையில், வங்கியிருந்து சித்தி லைலாவை ஓட்டமாவடியிலுள்ள தனது வர்த்தக நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞன், தனது வர்த்தக நிலையத்திற்குள் வைத்து அவரை கொலை செய்தார். எப்படி கொலை செய்தார் என்பது சடலம் மீட்கப்பட்ட பின்னரே தெரிய வரும். தற்போது, உரப்பையில் கட்டப்பட்டியே வாழைச்சேனை சந்தையில் சடலம் உள்ளது. நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட பின்னர், சடலம் அகற்றப்படும்.

பின்னர் சடலத்தை உரப்பையில் கட்டி, வேறு இரண்டு மீன் மாஸ் மூட்டைகளையும் ஏற்றி, வாழைச்சேனை சந்தையில் வளர்ப்பு மீன் விற்பனையில் ஈடுபடும் நண்பரின் கடைக்கு முன்பாக கொண்டு சென்று வைத்துள்ளார். அவற்றை பார்த்துக் கொள்ளும்படியும், மீண்டும் வந்து எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இரவு 7.30 மணியாகியதும் கடையை பூட்டுவதற்காக, மூட்டைகளை அகற்றும்படி நண்பரை தொலைபேசியில் அழைத்து கூறியுள்ளார்.

கைதான பிரதான சந்தேகநபர்

அப்போது, சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் இருந்தார். அவர் ஏற்றிச் சென்ற பெண் முறைப்பாடு பதிவு செய்தபடியிருந்தார்.

தான் நெருக்கடியில் இருப்பதாகவும், தனது எதிர்காலம் அவரது கையிலேயே உள்ளதாகவும் சந்தேகநபர், நண்பரிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாழைச்சேனை வர்த்தக நிலைய உரிமையாளர், வாழைச்சேனை பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். தனது வர்த்தக நிலையத்தின் முன் மூட்டை வைக்கப்பட்ட தகவலையும் தெரிவித்தார்.

இதையடுத்து, சந்தேகநபரான இளைஞன் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்தே மடக்கப்பட்டார்.

இரவு 8 மணியளவில் வர்த்தக நிலையத்திற்கு சென்ற பொலிசார், மூட்டையில் கட்டப்பட்டுள்ளது, காணாமல் போன பெண்ணின் உடையது என்பதை உறுதி செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மற்றுமொரு விபத்து

east tamil

அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த திமிங்கலம்: புதைக்கும் பணிகள் முன்னெடுப்பு

east tamil

சேருவிலவில் தரித்து நின்ற பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்து

east tamil

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவு நாள்

east tamil

திருக்கடலூரில் கரையொதுங்கிய இறந்த கடலாமை

east tamil

Leave a Comment