டோக்கியொ ஒலிம்பிக் தொடரின் 400 மீற்றர் மகளிர் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அல்லிசன் பெலிக்ஸ் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
இது அவரது 10 வது ஒலிம்பிக் பதக்கமாகும். எல்லா காலத்திலும் சிறந்த தடகள வீராங்கனைளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
400 மீற்றர் பந்தயத்தில் பஹாமாஸின் சௌனி மில்லர்-உய்போ தங்கப் பதக்கம் வென்றார், டொமினிகன் குடியரசின் மரிலிடி பவுலினோ வெள்ளி வென்றார்.
ஃபெலிக்ஸ், ஒன்பது ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற ஜமைக்காவின் மெர்லீன் ஓட்டேவின் சாதனையை கடந்து சென்றார்.
பெலிக்ஸ் இப்போது ஆறு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
நாளை 4×400 மீ அஞ்சலோட்ட பந்தயம் நடைபெறும். ரியோ ஒலிம்பிக்கில் இந்த பந்தயத்தில் அமெரிக்கா தங்கம் வென்றது. நாளையும்அமெரிக்கா ஏதாவதொரு பங்கம் வெல்லாமென கருதப்படுகிறது.
நாளை அமெரிக்கா பதக்கம் வென்றால் அது பெலிக்ஸ் இற்கு அது 11 வது பதக்கம் ஆகும்.