சிறிஜெயவர்த்தனபுர பல்லைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரை சிவில் உடையில் வந்த பொலிசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், தாம் தேடி வந்தது அவரல்ல, ஆள் மாறி செயற்பட்டு விட்டோம் என பொலிசார் அங்கிருந்து சென்றுள்ளனர்.
விரிவுரையாளர் அமிந்த லக்மல் என்பவரையே கைது செய்ய முயற்சிக்கப்பட்டது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி விட்டு திரும்ப தயாராக பேருந்தில் பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், வைத்தியர்கள் தயாரான போது சிவில் உடையில் ஏறிய மூவர், அவரை இழுத்துச் செல்ல முயன்றனர்.
எனினும், பேருந்திற்குள் இருந்த ஏனையவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தம்மை மீரிஹான பொலிசார் என அடையாளம் காண்பித்தனர்.
இருதரப்பிற்குமிடையிலான வாய்த்தர்க்கம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
பின்னர், தாம் தேடி வந்தது அவரல்ல என கூறி பொலிசார் சென்றுள்ளனர்.
இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள விரிவுரையாளர் அமிந்த லக்மல் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
01. சிவில் உடையில் வந்து எதையும் சொல்லாமல் எந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்ய முடியுமா?
02. அவர்கள் பின்னர் அவர்கள் ஒரு நபரைத் தேடி வந்ததாகக் கூறினர், அது பல்கலைகழக மாணவர் பிரதிநிதி வசந்த முதலிகே என்று அவர்கள் சொன்னார்கள். கடவுளே, ஊடகங்களில் புகழ்பெற்ற வசந்தவைஅவர்களால் அடையாளம் காண முடியவில்லையா?
03. கைது செய்ய வரும் அவருக்கு அல்லது அவளுக்கு எதிராக வாரண்ட் இருக்கக் கூடாதா ?? (சிவில் சட்டத்தின் கீழ்)
04. புகைப்படத்தின் மூலம் ஒருவரை கைது செய்வது அவசியமல்லவா. ?? (அவர்கள் விரும்பும் நபர் பேருந்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது என்று அவர்கள் கூறினர்)
05.நான்ஒரு ′ ′ விரிவுரையாளர் ′ ′ என்று உறுதியாக நம்புகிறேன். என்னை ஒரு விரிவுரையாளராக உருவாக்கிய சில உறுப்பினர் சக்தியிலிருந்து நான் நிவாரணம் பெற்றேன். ஆனால் இது மிகவும் சாதாரண குடிமகனுக்கு நடந்தால், அவருக்கு இந்த கதி இருக்குமா ?
06. இது ஒரு வேடிக்கையான நிகழ்வாக நான் கண்டேன். இது நாட்டின் சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இல்லையா?
அரசாங்கம் அடக்குமுறையைத் தொடங்குகிறது. இன்று எனக்கு வந்தபோது எனக்கு சில உதவியாளர்கள் மற்றும் துணை இருந்தனர். அது நாளை உங்களுக்கு வரலாம். ஆனால் அது வரும்போது உங்களுக்காக யாரும் இருக்க முடியாது. நீங்கள் என்ன காரணத்திற்காக கைது செய்யப்படுகிறீர்கள் என்று தெரியாமல் நீங்கள் சிறையில் அடைக்கப்படலாம். இறக்க முடியும். இது ஒரு ஜனநாயக அரசின் பண்பு அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் குறிப்பை பார்க்க இங்கு அழுத்துங்கள்