29.3 C
Jaffna
April 11, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.

அதில், விநாயகபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு பேருக்கும், நேரியகுளம் பகுதியில் பத்து பேருக்கும், தோணிக்கல் பகுதியில் இருவருக்கும், உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், மதீனாநகர் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் மூவருக்கும், காத்தார்சின்னக்குளம் பகுதியில் மூவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஐந்து பேருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதிகள் மூவருக்கும், ஒலுமடு பகுதியில் ஒருவருக்கும், பத்தினியார் மகிழம்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பம்பைமடு பகுதியில் ஒருவருக்கும், தட்டாங்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 46 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் கடந்த மூன்று நாட்களில் நேரியகுளம் பகுதியில் 64 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

Pagetamil

காவல்துறையில் புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்க முடிவு

Pagetamil

நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

தென்னக்கோனுக்கு பிணை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!