மட்டக்களப்பு, களுவங்கேணி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயில் குருக்கள், தலைவர், செயலாளர் ஆகியோரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
அந்த கோயிலில் வருடாந்த உற்சவத்தை நடத்த சுகாதாரத்துறையினரின் அனுமதி கோரப்பட்டிருந்தது. 15 பேருடன் உற்சவத்தை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனினும், கடைசிநாள் திருவிழாவில் சுகாதார விதிமுறைகளை மீறி பெருளமளவிலான மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 100 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஆலயம் அமைந்துள்ள வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவை தனிமைப்படுத்துமாறு, கொழும்பு கோவிட் செயலணிக்கு மட்டக்களப்பு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1