விதவிதமான பர்ஃப்யூம் பயன்படுத்த விரும்புவதில் பெண்களே முதன்மையானவர்கள். விதவிதமான பர்ஃப்யூம் பயன்படுத்த உங்கள் பட்ஜெட் சற்று எகிறவே செய்யும். ஆனால் சற்று மெனக்கெட்டு இதை வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் நச்சுத்தன்மையற்ற திரவத்தை உருவாக்கலாம். அதுவும் உங்கள் பட்ஜெட் எகிறாமலே. பல விதமான தயாரிப்புகள் இருந்தாலும் பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் பர்ஃப்யூம் பயன்படுத்தும் முறை குறித்து தெரிந்துகொள்வோம்.
தேவை:
நறுக்கப்பட்ட பூக்கள் – அரை கப் ( நடுத்தர அளவில் கிண்ணம்)
காய்ச்சிய வடிகட்டிய நீர் – 2 கப்
வெண்மை நிற துணி
ஸ்ப்ரே பாட்டில்
செய்முறை:
பூக்களின் இதழை மென்மையாக அலசி விடவும். கிண்ணத்தில் பூக்களை இரவு முழுவதும் ஊறவைத்து வெள்ளை துணி கொண்டு மூடி விடவும். மறுநாள் பூக்கள் ஊறவைத்திருக்கும் துணியில் சேர்த்து நன்றாக பிழிந்து எடுக்கவும். சுத்தமான வாணலியில் இந்த நீரை விட்டு இவை ஒரு டீஸ்பூன் ஆக மாறும் வரை விட்டு விடவும். பிறகு இதை இறக்கி ஆறியதும் ஸ்ப்ரே பாட்டிலில் விட்டு வைத்துவிடுங்கள். இரண்டு நாள் கழித்து பயன்படுத்தலாம்.
மல்லிகை பூக்களில் பர்ஃப்யூம்
தேவை:
ஓட்கா – 2 டீஸ்பூன்
காய்ச்சி வடிகட்டிய நீர் (ஆரஞ்சு சேர்த்த நீர்) – 1 டீஸ்பூன்
மல்லிகை எண்ணெய் – 30 துளி
லாவெண்டர் எண்ணெய் – 5 துளிகள்
வெண்ணிலா எண்ணெய் – 5 துளிகள்
வெள்ளை துணி
ஸ்ப்ரே பாட்டில்
செய்முறை:
அத்தியாவசிய எண்ணெயுடன் ஒட்கா சேர்த்து நன்றாக கலக்கவும். கண்ணாடி பாட்டிலில் விட்டு கலக்கி எடுக்கலாம். கலவையை இரண்டு நாட்கள் அப்படியே விடவும். கலவையை காய்ச்சி அதில் வடிகட்டிய நீர் அல்லது ஆரஞ்சு நீர் சேர்த்து மேலும் குலுக்கவும்.
குளிர்ந்த இடத்தில் வெயில் படாத இடத்தில் நான்கு வாரங்கள் வரை வைத்திருக்கவும். ஏதேனும் கசடு இருந்தால் அதை வெள்ளை துணியில் வடிகட்டி பாட்டிலில் வைத்து பயன்படுத்துங்கள். நாள் முழுக்க உங்களை வாசனையாக வைத்திருக்க இந்த மல்லிகை பர்ஃப்யூம் உதவும்.