Pagetamil
சினிமா

தனுஷின் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. ‘ஜகமே தந்திரம்’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனது 44 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

மாறன் படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் தனுஷ். ஏற்கனவே, மித்ரன் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்டப் படங்களில் தனுஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த பூஜையில் தனுஷ், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

D44 என தற்காலிமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்க பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ், அனிருத் கூட்டணி இந்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என அறிவித்திருந்தனர் படக்குழுவினர். அதன்படி தற்போது இந்த படத்தின் திருச்சிற்றம்பலம் என்ற டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்றிலிருந்து இருந்து தனுஷ் படத்தின் அப்டேட்கள் வரிசையாக வெளியாவதால் குஷியில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இதையும் படியுங்கள்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!