காலை உணவை எடுத்துக் கொள்வதால் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. எந்த அளவுக்கு காலை உணவு எடுத்துக் கொள்வது முக்கியமோ, அந்த அளவுக்கு அந்த உணவுகளில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதும் அவசியம். காலை உணவைத் தவிர்ப்போர் சீக்கிரமே சோர்ந்து போய் விடுவர். உங்களின் உடலின் கொலஸ்ட்ராலை நிர்வகிக்கவும் காலை உணவு மிகவும் உதவும். அதோடு காலை உணவை நல்ல சத்தான உணவுகளுடன் உங்கள் நாளைத் தொடங்குவது எளிதாக உங்களின் உடல் எடையை குறைக்க உதவும். எடை இழப்புக்கு உதவும் 5 அற்புதமான காலை உணவுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
முட்டை.
முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளது, அதோடு முட்டையில் நிறைய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. நீங்கள் காலை உணவோடு முட்டையை சாப்பிடும் போது உங்கள் பசியும். இது எடை இழப்புக்கு தீவிர ஊக்கத்தை அளிக்கும். ஒவ்வொருவருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் முட்டை தான் சரியான வழி. முட்டைகளை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் போல் செய்தோ எடுத்துக் கொள்ளலாம்.
ஓட்ஸ்மீல்.
காலை உணவிற்கு ஓட்ஸ் ஆரோக்கியமானதும், சுவையானதும் கூட. ஓட்ஸில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் இது உங்கள் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், செரிமானத்தை மெதுவாக்கி உங்களை நீண்ட நேரம் முழுதாக உணர வைக்க ஓட்ஸ் உதவும். இதில், அதிக விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ள கிவிஸ் மற்றும் பெர்ரி பழங்களையும் நீங்கள் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
யோகர்ட் மற்றும் பழங்கள்.
யோகர்ட் கிரீமியானது மற்றும் சுவையானதும் கூட. இது உங்கள் எடை இழப்புக்கு மிகவும் நல்லது. யோகர்ட்டில் சாதாரண தயிரை விட அதிக அளவு புரதமும், கார்போ ஹைட்ரேட்டும் உள்ளது. யோகர்ட்டில் நீங்கள் சில ராஸ்பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி பழங்கள், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்மூத்தீஸ்.
ஸ்மூத்திகளில் உங்கள் காலை உணவிற்கு தேவையான நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் உங்கள் எடையை குறைக்க உதவும் பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்க்கப்பட வேண்டும். மேலும், ஸ்மூத்தீஸில் சில சியா விதைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சியா விதைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது உங்கள் வயிற்று காலியாவதைக் குறைத்து, விரைவில் ஏற்படும் பசியைத் தடுக்கும்.