ரூபா. 2.5 கோடி மதிப்புள்ள காரை வாங்கிய பிரபல மலையாள நடிகர்.

Date:

மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மல்லுவுட் தவிர்த்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம். துல்கர் சல்மானுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.

குறைவாக அவர் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள மெர்சிடீஸ் பென்ஸ் ஜி 63 ஏஎம்ஜி காரை வாங்கியுள்ளார். அவர் கார் வாங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. தந்தை மம்மூட்டியை போன்றே துல்கரும் கார் பிரியர். மம்மூட்டியிடம் சுமார் 369 கார்கள் உள்ளன. மாருதி 800, ஜாக்குவார், பிஎம்டபுள்யூ, லேண்ட் க்ரூசர், ஆடி 17 அதில் அடக்கம்.

துல்கர் சல்மானிடம் மினி கூப்பர், பிஎம்டபுள்யூ 3, பிஎம்டபுள்யூ 18 உள்பட பல விலை உயர்ந்த கார்கள் உள்ளன. படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார்.
துல்கர் சல்மான் தற்போது ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாள் ஜூலை 28 ம் தேதி தேதி துல்கரின் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை வெளியிட்டனர். இன்னும் பெயர் வைக்காத அந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் துல்கர்.

துல்கர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். அந்த படத்தை பார்த்துவிட்டு தேசிங் பெரியசாமியை ரஜினி பாராட்டினார். தொடர்ந்து அண்ணாத்த படத்தை அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்