வடக்கில் பால்மா பதுக்கிய 3 வர்த்தக நிலையங்களிற்கு எதிராக வழக்கு!

Date:

வடமாகாணத்தில் பால்மா உற்பத்தி பதுக்கல் தொடர்பில் 3 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என வடமாகாண பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பிராந்திய அலுவல்கள் பதில் உதவிப்பணிப்பாளர் எ.எல். ஜவ்பார் சாதிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரு பால்மா வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், பால்மா பொருட்களை பதுக்கும் செயற்பாட்டில் ஒர் சில வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரதான பால்மா வகைக்கும், உள்ளுர் உற்பத்தி பால்மா வகைக்கும் என இரு வகையான பால்மா வகைகளுக்கு வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடுகள் நிலவி வருவதுடன், ஒர் சில வர்த்தக நிலையங்களில் பால்மா இருப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் அதனை பதுக்கும் செயற்பாட்டில் ஒர் சில வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளமையுடன் தற்போது மக்கள் பசு பாலினை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளமையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.

பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பதுக்கல் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரபையினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பதுக்கல் தொடர்பில் வடமாகாண பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பிராந்திய அலுவல்கள் பதில் உதவிப்பணிப்பாளர் எ.எல். ஜவ்பார் சாதிக் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்ட போது,

வடமாகாணத்தில் பால்மா உற்பத்தி பதுக்கல் தொடர்பில் 3 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன், வடமாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள எமது அலுவலர்கள் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பால்மா பதுக்கல் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள இருந்தால் அருகேயுள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை காரியாலயத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்