26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மரங்களின் கீழும்… கட்டிடத்திற்கு வெளியிலும்… ஒரு கட்டிலுக்கும், ஒட்சிசன் சிலிண்டருக்கும் காத்திருக்கும் நோயாளிகள்: மக்களே எச்சரிக்கை!

களுபோவில வைத்தியசாலையில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை முகப்புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர்  திலக்ஷி மதுவந்தி.

அவரது தாயாரை கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைக்கு அனுமதிக்க சென்ற போது, பார்த்தவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்கள் கொரோனா அபாயத்தை குறைத்து மதிப்பிடாமல், முழுமையான சுகாதார நடைமுறைகளை பேணி, தம்மையும், குடும்பத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்துகிறார்.

இலங்கையில் அண்மையில் அதிகரித்து செல்லும் கொரோனா நிலவரத்தின் மத்தியில், வைத்தியசாலை கட்டமைப்பின் திறனை மீறிய தொற்றாளர்கள் பதிவாகினால், இந்தியாவின் நிலைமை ஏற்படுமென தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் பொறுப்புணர்வை வலியுறுத்தும் விதமாக தொடர்ந்து அபாய காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அவரது பதிவில்,

இப்போது அதிகாலை 1.20 மணி.

இது களுபோவில வைத்தியசாலையின் கொவிட் வார்ட்.

வார்டில் ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள். அவர்கள் சிக்கலான நிலையில் இருக்கிறார்கள்.

வார்டில் உள்ள படுக்கைகளின் கீழ், மற்றவர்கள் உயிருக்கு போராடி, ஒட்சிசனைப் பெறுகிறார்கள். தரையில் நோயாளிகள் நடக்க பயப்படுகிறார்கள்.
மீதமுள்ள அனைத்து (நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்) நீண்ட பெஞ்ச், நாற்காலிகள், மரங்களின் கீழ் படுத்திருக்கிறார்கள்.

மணல் தரையில் ஒரு போர்வையுடனும் அதுவும் இல்லாமல் படுத்துள்ளதை காணமுடிகின்றது.

குளிரிலும் நுளம்பு கடியிலும் , இந்த மக்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

வைத்தியசாலையில் ஊழியர்கள் குறைவாகவே உள்ளனர். அவர்கள் ஒரு தெய்வத்தைப் போல கடினமாக நோயாளர்களுடன் போராடுகின்றனர்.

என் அம்மா இதுபோன்று கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்தபோது, ​​என் தந்தை ஒரு ஒட்சிசன் இயந்திரத்திற்கு காத்திருந்தார்.

இந்த வாழ்க்கையில் அனுபவப்பதற்கு இதைவிட பெரிய வலி இல்லை. கைவிடப்பட்ட ஒரு நிலையில் உள்ளோம்.

நாளை எனக்கும் தொற்று ஏற்படும்.

நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

கொரோனாவை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

உங்களால் முடிந்தவரை கவனமாக இருங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவைப் பற்றி நான் சொன்ன செய்திகளை இன்று நான் என் கண்களால் பார்க்கிறேன். கவனமாக இருங்கள் .. மிகவும் கவனமாக இருங்கள்…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment