முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புபொலிஸ் பிரிவில் போலி நாணயத்தாளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 போலி ரூ .500 நோட்டுகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன.
41 வயதான பெண்ணொருவரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதானார்.
தற்போது ரூ .500, ரூ .1,000 மற்றும் ரூ .5,000 போலி நாணயத்தாள்களை அச்சடித்து பயன்படுத்தும் போக்கு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
பணப் பரிவர்த்தனைகளின் போது பண தாள்களில் உள்ள வோட்டர்மார்க் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிசார் எச்சரித்துள்ளனர்.
ஏதேனும் போலி நாயணத்தாள்கள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
1
+1
2