கர்ப்பிணிப் பெண்களை கடமைக்கு அழைக்காமலிருக்க தீர்மானம்!

Date:

கர்ப்பிணிப் பெண்கள் வேலைக்கு சமூகமளிக்காமல் வீட்டிலிருந்தே கடமையாற்றுவதற்கு வசதியாக புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த தகவலை வெளியிட்டார்.

புதிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தற்போது தொகுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களின் நலனில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.

ஓகஸ்ட் மாத இறுதியில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி மருந்தை வழங்குவதே அரசின் குறிக்கோள் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் காமா போன்ற வைரஸ் வகைகள் உலகெங்கிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா வகைகள் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்திலிருந்து திரும்பிய மனைவி, மச்சான் மீது கணவன் கத்திக்குத்து!

குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது...

பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்

பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார். தமிழ் நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரான அவர்,...

மச்சாளை கட்டிவைத்து வல்லுறவுக்குள்ளாக்கிய மன்மதராசா, அப்பாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

கொலை மிரட்டல் விடுத்து 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்