எந்த நோயையும் கட்டுப்படுத்தும் சர்வ ரோக நிவாரண மந்திரம்
முழு மனதோடு இம்மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வருவதன் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி குணப்படுத்தவும் முடியும். நாமத்ரய மந்திரமானது நாமத்ரய அஸ்திர மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இம்மந்திரம் எல்லா வகையான நோய்களையும் அஸ்திரமாக நின்று அழிக்கவல்லது. மகா விஷ்ணுவின் மூன்று திவ்ய நாமங்களை கொண்டதே இந்த நாமத்ரய மந்திர அஸ்திரம்.
நாமத்ரய மகா மந்திரம்:- ஓம் அச்சுதாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் கோவிந்தாய நம:
சர்வ ரோக நிவாரண மந்திரம் என்றும் இதை கூறுவர். எவ்வாறான கொடிய நோயாக இருந்தாலும் அதை இத்திவ்ய நாமத்தை கூறுவதன் மூலம் சரி செய்துவிட முடியும் என்று வியாச மகரிஷி கூறினார்.
இம் மந்திரத்தை ஜெபிக்க செய்ய தனிப்பட்ட உபதேசங்களோ தீக்ஷைகளோ தேவையில்லை. முழு மனதோடு இம்மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜபித்து வருவதன் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி குணப்படுத்தவும் முடியும். இந்த சாதாரண ஜெபமாகவோ அல்லது லிகித ஜபமாகவோ (ஈட்டில் எழுதுவது) ஓர் நாளுக்கு குறைந்தபட்சமாக 108 முறை ஜெபித்து வர வேண்டும்.
மேலும் ஸ்லோகங்கள் செய்திகள்
காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையை பார்த்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சகல ஞானமும் அருளும் சரஸ்வதி நமஸ்துதிசகல ஞானமும் அருளும் சரஸ்வதி நமஸ்துதி
தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க..தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க ..
இந்த ஸ்லோகத்தை சொல்லி இழந்ததைப் பெறலாம்.