கோவிட் -19 க்கு மத்தியில் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு திரும்ப அழைக்கும் முடிவின் காரணமாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உட்பட பல தரப்பினர் ஆபத்தில் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைக்கும் அரசின் முடிவின் காரணமாக, சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. தற்போது கோவிட் -19 வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிள்ளார்.
சுழற்சி முறையில் ஊழியர்களை பணிக்கமர்த்தும் சுற்றறிக்கையை இரத்து செய்து, அனைத்து அரச துறை ஊழியர்களையும் பணிக்கு அழைக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமது தொழிற்சங்கம் புகார் அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சுற்றறிக்கை பல்வேறு தரப்பினருக்கு- குறிப்பாக கரப்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளையும் நீக்கியுள்ளது. இதன் விளைவாக, பல்வேறு தரப்பினர் கடுமையான ஆபத்தில் இருப்பதாக அவர் கூறினார்.