Pagetamil
இலங்கை

கொரோனா தொற்று எகிறுகிறது; நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்: அதிர்ச்சி காட்சிகள்!

நாட்டில் கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலைகள் நிறைந்து வருகிறது. இந்த நிலையில், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் உள்ள மோசமான நிலைமை குறித்த காணொளி  வெளியிடப்பட்டுள்ளது.

டெய்லி மிரர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளின் படி, நோயாளிகள் மருத்துவமனையின் நடைபாதையில் பாய்களில் தூங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தினசரி அதிகரித்து வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக மருத்துவமனையின் திறன்னை மிஞ்சிய நோயாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், மக்கள் பொறுப்புடன் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலமே இவ்வாறான நெருக்கடியிலிருந்து மீள முடியுமென சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இலங்கையின் பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ஐசியு) தற்போது கோவிட் நோயாளிகளால் நிரம்பிவிட்டன.

இதேவேளை, கொழும்பு வடக்கு வைத்தியசாலையின் நிலைமை குறித்த இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொறுப்பதிகாரி கைது

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

Leave a Comment