கனடாவில் வாகனம் மோதி 2 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஸ்காபரோ பகுதியில் கடந்த சனிக்கிழமை (31) இந்த விபத்து நடந்தது.
மார்க்கம் வீதியில், மெக்னிகோல் அவென்யூவின் வடக்கு நுழைவாயில் வழியாக தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள மெஜெஸ்டிக் சிட்டி கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்திற்கு சென்ற ரெயோட்ட 4 ரன்னர் வகை வாகனம் மோதியதில் விபத்து நேர்ந்தது. 39 வயதான பெண் இந்த வானத்தை செலுத்தி சென்றார்.
ஆதித்தன் பிரசன்னா என்ற இரண்டு வயது சிறுவனே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த காட்சிகள் யாரிடமாவது இருந்தால் தமக்கு வழங்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
2