எதிர்வரும் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மற்றும் ஐசிசி ரி 20 உலகக் கோப்பை 2021 க்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தேசிய மற்றும் முதல் தர கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் ரி20 லீக் போட்டி தொடரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடத்துகிறது.
‘SLC Invitational T20 League’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டி, எதிர்வரும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி தொடங்குகிறது.
Blues , Reds, Greens, Greys என 4 அணிகள் பங்கு கொள்ளும் இந்த போட்டிகள், கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறும்.
தசுன் ஷானக, தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா மற்றும் அஷான் பிரியஞ்சன் ஆகியோர் அணிகளிற்கு தலைமை தாங்குகிறார்கள்.
வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோருக்கு போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Blues: நிஷான் மதுஷ்க, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா (கப்டன்), ஏஞ்சலோ பெரேரா, அஷென் பண்டார, சஹான் ஆராச்சிகே, லஹிரு சமரகோன், தனஞ்சய லக்ஷன், சுரங்க லக்மல், கலன பெரேரா, தில்ஷான் மதுஷான்ரே, ஷிரான் மகேஷ்.
Greens: ஹிரு உதார, மஹேல உடவத்த, கமீல் மிஷார, பதும் நிசங்க, அஷான் பிரியஞ்சன் (கப்டன்), கமிந்து மெண்டிஸ், சம்மு அஷான், ரமேஷ் மெண்டிஸ், சுமிந்த லக்ஷன், இஷான் ஜயரத்ன, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, நுவான் துஷார, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தல்தெனிய.
Reds: அவிஷ்கா பெர்னாண்டோ, நிபுன் தனஞ்சய, தினேஷ் சந்திமல் (கப்டன்), ஓஷத பெர்னாண்டோ, அசேல குணரத்ன, லசித் அபேரத்ன, சீக்குக்கே பிரசன்ன, சமிக கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, முகமது ஷிராஸ், அசித பெர்னாண்டோ, ஹிமேஷ் ராமநாயக்க, அமிஷ ராமநாயக்க, நிமேஷ் விமுக்தி, அகில தனஞ்ஜய.
மேலதிக வீரர்கள்: ரோஷென் சில்வா, சந்துன் வீரக்கொடி, கசுன் ராஜித, லஹிரு மதுஷங்க, சங்கீத் குரே.