28.1 C
Jaffna
December 29, 2024
Pagetamil
சினிமா

உயிர் வாழ்வது குற்ற உணர்ச்சியாக இருக்கின்றது: யாஷிகா உருக்கம்.

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டார். விபத்திற்கு பிறகு அவர் போட்டுள்ள முதல் போஸ்ட் இதுவாகும்.

யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் நண்பர்கள் செய்வது, அமீர் மாணவர்கள் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற வருகிறார்கள். தொடர்ந்து யாஷிகா இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது, என் தற்போதைய நிலையை விவரிக்கவே முடியாது. நான் இனி குற்ற உணர்வுடன் தான் வாழ்வேன். பயங்கர விபத்தில் இருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா, இல்லை என் உயிர் தோழியை எடுத்து கொண்டதற்காக பழி சொல்வதா என்று எனக்கு தெரியவில்லை. நான் பவானியை மிஸ் பண்ணுகிறேன். நீ என்னை மன்னித்துவிடுவாய் என தெரியும். ரொம்ப சாரி. உன் குடும்பத்தாரை இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் விட்டுவிட்டேன். ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் பண்ணுகிறேன்.

உன் ஆத்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன். நீ மீண்டும் என்னிடம் வர பிரார்த்தனை செய்கிறேன். ஒரு நாள் உன் குடும்பத்தார் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் ஒன்றாக இருந்த நினைவுகளை என்றும் கொண்டாடுவேன் என்றார்.

நான் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடப் போவது இல்லை. அதனால் ரசிகர்கள் யாரும் என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் யாஷிகா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

Leave a Comment