இயக்குனர் வசந்த் படம் ரிலீஸ்க்கு தயார்.. ரசிகர்கள் குதூகலம்

Date:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் வசந்த். இவர் இயக்கத்தில் கடைசியாக ‘மூன்று பேர் மூன்று காதல்’ படம் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா அந்தாலஜியில் ‘பாயாசம்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார்.

தொடர்ந்து வசந்த் இயக்கத்தில் உருவாகி நீண்ட கால கிடப்பில் போடப்பட்டிருக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் தற்போது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று பேர் மூன்று காதல் படத்திற்கு பிறகு வசந்த் இயக்கத்தில் உருவான படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. பார்வதி, லக்ஷ்மிகுமார் சந்திரமௌலி, கருணாகரன், சுந்தர் ராமு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை வசந்தே தயாரித்துள்ளார். பல்வேறு சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை பெற்ற இந்த படம் நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒருவழியாக தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்தப்படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, திரிஷா, ஆத்மிகா, சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகிறது, நீண்ட கால ரிலீசுக்கு காத்திருக்கும் ‘நரகாசூரன்’ படமும் சோனி லைவ்வில் உள்ளது. தொடர்ச்சியான வசந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் செப்டம்பர் மாதம் சோனி லைவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

9 இயக்குனர்கள், 9 குறும்படங்கள் என உருவாகியுள்ள நவரசா அந்தாலஜி வெப் சீரிஸில் இயக்குனர் வசந்த் ‘பாயசம்’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். ரோகினி, டெல்லி கணேஷ், அதிதி பாலன் உள்ளிட்டோர் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர். மணிரத்னம் தயாரித்துள்ள இந்த வெப் தொடர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்