25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

மீண்டும் இரணைமடுவிற்கு போகாதீர்கள்: டக்ளசிடம் கோருகிறார் சீ.வீ.கே!

யாழ்ப்பாண குடாநாட்டிற்கான பொருத்தமான குடிநீர்த் திட்டமாக பாலியாறு திட்டம் வடமாகாணசபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இரணைமடு திட்டத்தை கையிலெடுக்க வேண்டாமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார், வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு திட்டத்தை கையிலெடுப்பதால், குடாநாட்டு மக்களின் குடிநீர் திட்டத்திற்கென மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அதற்காக செலவிட்ட பணம், நிபுணர்களின் உழைப்பு வீண் விரயமாகுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

கீழ் பாலியாற்று வடிநிலத்திலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டுக்கான குடிநீர்
விநியோகம் யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் பொதுவாகவும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் தீவக பிரதேசங்களின் மக்கள் குறிப்பாகவும் கடந்த பல தசாப்தங்களாக அனுபவித்து வரும் குடிநீர்ப் பிரச்சினைகள் பற்றி தாங்கள் தெளிவாகவே தெரிந்தவர் என்ற வகையில் அதனை மேலும் விபரிக்க வேண்டிய தேவையில்லை என நம்புகிறேன்.

இந்த விடயம் தொடர்பில் ஒரு புதிய முன்மொழிவு பற்றி தாங்கள் கருத்து வெளியிட்டமையால் மேற்படி திட்டம் தொடர்பான விபரமான அறிக்கையை தங்களுக்கு சமர்ப்பித்து அதனை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கோரி இக்கடிதம் தங்களுக்கு எழுதப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படலாம் என்ற பல முன்மொழிவுகளும் முன்னெடுப்புகளும் எதுவித முன்னேற்றமும் இன்றி காலம் கடத்தப்பட்டு கானல் நீராகவே காணப்படுகின்றது. இவற்றினால் பொது நிதி விரயமாகியதுடன் ஆய்வாளர்களும் ஆலோசகர்களும் பயனடைந்தனரே தவிர மக்கள் எந்தப் பயனையும் அடையவில்லை.

கடந்த வடக்கு மாகாண சபைக் காலத்தில் 26.02.2018 ஆம் திகதி முதலமைச்சர் தலைமையில் பல வெளிநாட்டு உள்நாட்டு நிபுணர்கள் கலந்து கொண்ட நீர் வழங்கல் தொடர்பான கலந்துரையாடலில் இப்பொழுது பாலி ஆறு ஊடாக வருடம் பூராகவும் கடலுக்கு செல்லும் நீரை பொருத்தமான திட்டத்தின் மூலம் குடாநாட்டுக்கு கொண்டு சென்று அதன் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு எதுவித எதிர்ப்பும் இருக்க நியாயமில்லை என்ற கருத்தும் கவனத்திற்கு எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வட மாகாண பொறியியல் சேவைகளின் பிரதிப் பிரதம செயலாளர் தமது 13.03.2018 ஆம் திகதிய கடிதம் மூலம் நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளரிடம் அறிக்கை கோரியிருந்தார்.

இதற்கமைய நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளரின் 17.07.2018 ஆம் திகதிய அறிக்கையில் கீழ் பாலியாற்று வடி நிலத்திலிருந்து யாழ்.குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகம் சாத்தியமானது எனத் தெரிவிக்கப்பட்டது.

இவ்வறிக்கையின் பிரதியை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிரதிப் பொதுமுகாமையாளரின் சாதக பரிசீலனைக்கு தமது 19.07.2018 ஆம் திகதிய கடிதம் மூலம் பிரதம செயலாளர் முன்னளித்தார்.

இவற்றைத் தொடர்ந்து நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு எழுதிய 07.08.2018 ஆம் திகதிய கடிதம் மூலமும் அதே திகதியில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளருக்கும் அனுப்பி ஆலோசனைகளை கீழ் பாலி ஆறு நீர் வழங்கல் திட்டத்துக்கு மட்டுப்படுத்துமாறு கோரியிருந்தார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பான பிரேரணை ஒன்று வடக்கு மாகாண சபையில் 04.10.2018 ஆம் திகதிய 133 ஆவது அமர்வில் எம்மால் முன்மொழியப்பட்டு முதலமைச்சரால் வழிமொழியப்பட்டு ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு பிரதம செயலாளருக்கு மேல் நடவடிக்கைக்காக முன்னளிக்கப்பட்டது.

எம்மைப் பொறுத்தவரை வடக்கு மாகாண சபை இயற்றிய முக்கிய அபிவிருத்தித்
திட்டம் இதுவே தான். இந்த விடயம் தொடர்பாக முன்னாள் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் அவர்களுக்கு 22.01.2019 ஆம் திகதியிலும் தற்போதைய ஆளுநர்  திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு 12.02.2020 மற்றும் 18.11.2020 ஆம் திகதிகளில் எழுதிய கடிதங்களில் இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என எழுதியிருக்கிறேன்.

இந்த நிலையில் பின்வரும் விடயங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
1. இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் பெறுதல் என்பது பல்வேறு காரணங்களால் சாத்தியமாகாது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு இனிமேலும் அது பற்றி விவாதிப்பது பலனற்றது.

2. மகாவலி நீர் பெறுதல் மொறகாகந்த நீர் பெறுதல் என்பது இப்போதைக்கு சாத்தியமானது அல்ல என்று கருதப்படுகின்றது.

3. எனவே, வடக்கு மாகாணத்துக்குள்ளேயே இருக்கும் பாலி ஆற்றினூடாக வருடம் பூராகவும் கடலைச் சென்றடையும் நீரைத் திசை திருப்பி யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட வடக்கு மாகாண சபை அதன் ஒரேயொரு குடிநீர் விநியோகத் திட்டமாக அதன் 04.10.2018 ஆம் திகதிய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் இயற்றியது.

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர்ரூபவ் நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் பொறியியல் சேவைகள் பிரதிப் பிரதம செயலாளர் ஆகியோரின் தொடர் நடவடிக்கைகளால் பிரதம மந்திரியின் அமைச்சின் ஆலோசனைக் கூட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு சாத்தியப்பாட்டு அறிக்கை பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவேரூபவ் எதுவித பிரச்சினைகளையும் எதிர்நோக்காத இந்தத் திட்டத்தை மிகத் துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து கழற்றி விடப்படும் கட்சிகள் எவை?: ஞாயிறு தீர்மானம்!

Pagetamil

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

Leave a Comment