பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த சண்டை சமீபத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னை மற்ற போட்டியாளர்கள் உடன் ஒப்பிடாதீர்கள் என வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட ரம்யா கிருஷ்ணன் அதெப்படி கம்பேர் செய்யாமல் போட்டியை ஜட்ஜ் செய்ய முடியும் என கேட்டார். அதற்கு பிறகு வனிதா செட்டில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.
அதற்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிகுறியில் ரம்யா கிருஷ்ணனை தாக்கி பேசினார். பெண்ணின் முன்னேற்றத்திற்கு மற்றொரு பெண் தான் தடையாக இருக்கிறார் என்று கூறினார்.
சமீபத்தில் நகுல் அளித்திருக்கும் பேட்டியில் வனிதா அம்மன் கெட்டப் போட்டுகொண்டு செட்டில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் தன்னைப் பற்றி தகாத வார்த்தைகளில் பச்சையாகப் பேசினார், அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சமீபத்தில் நகுல் மற்றும் மனைவி ஸ்ருதி அளித்த இந்த பேட்டி பற்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பாராட்டி பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா தற்போது ட்விட்டரில் பேசுகிறார்.
“நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள எனக்கு நேரம் இல்லை. செட்டில் என்ன நடந்தது, அதன் பின் ஜட்ஜுகளை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிடுவதற்கு வித்தியாசம் உள்ளது.
“எனக்கு ஒருவருடன் பிரச்சனை வருகிறது. அது எங்களுக்கு நடுவில் தான். நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்” என கூறி உள்ளார் வனிதா.