சிறுமியை பாலியல் பலாத்காரப்படுத்திய சந்தேகநபரின் பிணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்காக, இலஞ்சம் வாங்கிய சாலியவெவ பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தின் கழிவறைக்குள் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தந்தைக்கு பிணை வழங்குவதை எதிர்க்காமல் இருப்பதற்காக அவர் இலஞ்சம் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான நீதவான் விசாரணை இன்று (03) புத்தளம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ள நிலையில், சந்தேகநபரின் தந்தையிடம் இலஞ்சம் கோரியதாக, ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது.
இதையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் வழங்கப்பட்ட பணத்தை, சந்தேகநகரின் தந்தை, பொலிஸ் உத்தியோகத்தரிடம் வழங்கினார்.
நீதிமன்றத்தின் கழிவறையில் பொலிஸ் உத்தியோகத்தர் .லஞ்சத்தை பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்