1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் 33 புத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரந்தலாவ பகுதியில், விடுதலைப் புலிகள் என நம்பப்படுபவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்களுடன் சென்ற பேருந்து நுவரகலதென்ன கிராமத்திற்கு அருகில் 20 ஆயுதம் ஏந்திய நபர்களால் வழிமறிக்கப்பட்டது.
மகாவாபியில் உள்ள விகாரையில் இருந்து களனி ராஜா மகா விகாரைக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பௌத்த பிக்குகள் பேருந்தில் இருந்தனர். அரந்தலாவ காட்டுப் பகுதிக்கு பேருந்து செலுத்தப்பட்டது.
பௌத்த பிக்குகள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு நடத்தப்பட்டதில் 33 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 7 – 18 வயதிற்குட்பட்ட இளம் பிக்குகள் 30 பேர்.