குழந்தை ஆரோக்கியமான முறையில் வளர்கிறார்களா என்பது குறித்து இளந்தாய்மார்கள் எப்போதும் கவலைகொள்வதுண்டு.
ஒரு மாதம் முடிந்த பிறகு குழந்தையின் வளர்ச்சி படிப்படியான செயல்முறையை கொண்டுள்ளது. இந்த காலங்களில் என்ன எதிர்பார்க்கலாம் என்ன மாதிரியான வளர்ச்சி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
குழந்தைக்கு ஒரு மாதம் ….
பிறந்த குழந்தை உடல் திரவத்துடன் அதிக எடையை கொண்டு பிறந்திருப்பார்கள். இந்த ஒரு மாதத்தில் உடல் திரவம் வெளியேற்றப்பட்டு அதை இழக்க நேரிடும். பொதுவாக குழந்தையின் உடல் எடையில் 10% வரை குறையும். முதல் சில நாட்களில் குழந்தைக்கு எடை குறைப்பு ஏற்பட்டால் நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.
குழந்தைக்கு ஒரு மாசம், குழந்தையின் அழுகை சத்தம் சொல்லும் விஷயங்கள் என்ன, அம்மாக்கள் தெரிஞ்சுக்க வேண்டியது என்னென்ன?
இந்த மாதத்தில் குழந்தையின் எடை, உயரம், தலைச்சுற்றளவு மற்றும் அளவு அளவை பரிந்துரை செய்வார். செவிப்புலன், தகவல் தொடர்பு மற்றும் மொழி திறன் உள்ளிட்ட வளர்ச்சியை கண்காணிக்கலாம்.
4 வார குழந்தையின் வளர்ச்சி …
4 வார வயதில் குழந்தையிடம் தொடர்பு கொள்ள பெற்றோர்கள் பேச வேண்டும். உரையாடுதலும் அவசியம். குழந்தைக்கு மொழித்திறன் வளர்க்கவும் இது முக்கியமான வழிகளில் ஒன்று. குழந்தையின் செவிப்புலன் மற்றும் பார்வை வளரும் போது அவரது குரல்கள், ஒலிகள் மற்றும் பழக்கமான முகங்களை அடையாளம் காண முடியும்.
5 வார குழந்தையின் வளர்ச்சி ….
5 வாரங்களுக்குள் குழந்தையின் கழுத்தில் உள்ள தசைகள் வலுவடைந்து வயிற்றில் படுத்திருக்கும் போது உங்கள் குழந்தை சிறிது நேரம் தலைதூக்கும். குழந்தையின் கழுத்தில் உள்ள தசைகள் வலுவடைந்து வயிற்றில் படுத்திருக்கும் போது குழந்தையின் தலையை தூக்க முடியும்.
குழந்தை இரவு நேரத்தில் அதிக நேரம் தூங்கலாம். எழுந்திருக்காமல் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை கூட இருக்கலாம். நான்காவது மற்றும் ஆறாவது வாரத்தில் முதல் வளர்ச்சியைத் தூண்டுவதால் குழந்தை ஐந்தாவது வாரத்தில் 200 கிராம் வரை அதிகரிக்கலாம்.
6 வார குழந்தையின் வளர்ச்சி ….
6 வாரங்களில் குழந்தைக்கு முழுமையான செவிப்புலன் இருக்கும். வெளியிலிருந்து வரும் சத்தம் மற்றும் குரல்களில் கவனம் செலுத்த முடியும். குழந்தை மெல்லியைசையை கேட்பார்கள். குழந்தைக்கு தாயை அடையாளம் தெரியும்.
7 வார குழந்தையின் வளர்ச்சி ..
7 வாரங்களில் குழந்தையின் வளர்ச்சியில் குழந்தை இரண்டு அங்குலம் வரை வளர்ந்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம். குழந்தையின் மூளையும் படிப்படியாக வளரும் நேரம் இது. கற்றலில் ஈடுபட சிறந்த நேரம். பார்வைத்திறன் கூடும் நேரம் இது. குழந்தையின் முன் 60 செ.மீ. வரை பொருள்களை வைத்து கவனத்தை ஈர்க்கலாம்.
குழந்தை வளர்ச்சியில் பொதுவான அறிகுறிகள் …….
அடிக்கடி குழந்தை அடிக்கடி அழுவார்கள். குழந்தைக்கு பெருங்குடல் பிரச்சனை உள்ளதா என்ற அறிகுறிகளை சரிபார்க்கவும். குழந்தைகள் தங்கள் முஷ்டிகளை உருட்டி முழங்கால்களை மார்பு வரை இழுத்து கண்களை இழக்க மூடி அழும் போது பிறப்புறுப்பு பகுதி அகலமாக இருக்கும். இது பெருங்குடல் நோய் கண்டறிவதற்கான பொதுவான விதி.
முதல் மாதம் குழந்தையின் வளர்ச்சி !!!
குழந்தை கைகளை குலுக்கவோ, வாய்க்கு கொண்டு வரவோ செய்வார்கள். உள்ளங்கைகளை இறுக்கி மூடி கொள்வார்கள். குழந்தை தாய்ப்பாலின் வாசனையை அடையாளம் காணும். கசப்பான அல்லது அமில வாசனையை உணர்ந்து அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
குழந்தையின் பார்வை வளர்ச்சியடைந்திருக்கும். குரலை அடையாளம் தெரிந்துகொள்வார்கள்.குழந்தை தாயை பார்த்து சிரிக்க தொடங்கியிருக்கும். ஆறாவது வாரத்தில் தாயின் குரலையும் முகத்தையும் அடையாளம் காணும்போது எதிர்வினை புன்னகையை அடையாளம் காண முடியும்.