25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத சருமப் பாதுகாப்பு டிப்ஸ்….

 

குளிர்கால மாதங்களில் நம்மால் வீட்டிற்குள் அடங்கி விட முடியாது. ஆயுர்வேதம் உங்களுக்கு இந்த தருணங்களில் உதவ வருகிறது. பண்டைய மருத்துவ முறைபடி, சில எளிய சுய பராமரிப்பு குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் குளிரை எளிதாக கையாளலாம். பரிந்துரைக்கப்பட்ட 5 ஆயுர்வேத குறிப்புகள் நீங்கள் இந்த குளிர்காலத்தில் பின்பற்ற வேண்டியவை:

​மஞ்சள் பால்
பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் சூடாக இருக்க காபி அல்லது தேநீர் குடிக்கிறார்கள். ஆனால் காஃபினேட்டட் பானங்கள் உங்களுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. இந்த பருவத்தில், நீங்கள் சூடான கப் காபியை குடிப்பதை கைவிட்டு, ஆரோக்கியமான மஞ்சள் பாலை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் மஞ்சள் பால் அல்லது கோல்டன் பால் குடிப்பது மோசமான சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் இந்த பானத்தில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஏலக்காய் தூள் போன்ற சில மசாலாப் பொருட்களையும் சேர்த்து குடிக்கும் போது, அது மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

மசாஜ்
அத்தியாவசிய எண்ணெய்கள், நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது உங்கள் உடலை சூடாக வைத்திருக்கவும், குளிர் காலநிலையை எதிர்த்துப் போராடவும் உதவும். மேலும் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். காலையில் குளிப்பதற்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் சருமத்தில் மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்வது உங்களுக்கு மன அமைதியையும் தருகிறது. மன அழுத்தத்தை விடுவித்து, உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

​தேங்காய் எண்ணெய்
வறண்ட மற்றும் பிசுபிசுப்பான கூந்தல் குளிர்காலத்தின் போது மற்றொரு பொதுவான பிரச்சினையாகும். குளிர் காற்று உங்கள் கூந்தலில் உள்ள அனைத்து ஈரப்பதத்தயும் எடுத்து விடும். இந்த பருவத்தில் உங்கள் தலைமுடியை ஊட்டமளிக்கவும் வலுப்படுத்தவும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். உங்கள் விரல் நுனியில் தேங்காய் எண்ணெயில் ஒரு சில துளிகள் எடுத்து, அதை உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது உங்கள் கூந்தலை வலுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும் .

​சூடான உணவை சாப்பிடுங்கள்
கோடை காலத்துடன் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் நமது செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளது. எனவே, இந்த பருவத்தில் குளிர்ந்த உணவைத் தவிர்க்க முயற்சிக்கவும். நீங்கள் குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் செரிமான அமைப்பு அதை செரிமானம் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இது பெரும்பாலும் அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது. பிற வயிறு பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமாக இருக்க சூடான மற்றும் செரிமானம் ஆகக்கூடிய உணவை சாப்பிடுங்கள்.

​சுறுசுறுப்பாக இருங்கள்
எந்த பருவத்திலும் ஆரோக்கியமாக இருக்க, சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். குளிர்காலத்தில், காலையில் எழுந்து நடைபயிற்சி செல்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால் நீங்கள் பிட் ஆக இருக்க அதை செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் வெளியே சென்று பயிற்சி செய்ய விரும்பவில்லை என்றால் , உங்கள் வீட்டில் யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம். நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சி செய்தாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment