இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் திருத்தப்பட்டது என்பதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.
உரையாடல் வெளியானதை தொடர்ந்து, திருமதி விக்கிரமசிங்க இடைநீக்கம் செய்யப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், இடைநீக்க உத்தரவை இரத்து செய்ய வேண்டும் மற்றும் உடனடியாக பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நிசங்க சேனாதிபதியிடம் ரூ.2 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி, தில்ருக்ஷி டயஸ் விக்கிரமரசிங்க சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த சிதைக்கப்பட்ட உரையாடலை நிசங்க சேனாதிபதியே வெளியிட்டிருந்தார்.
அவர் அப்போது அந்த உரையாடலை வெளியிட்டதை தொடர்ந்து அரச சார்பு ஊடகங்கள் அதை மீள மீள ஒலிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.