ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பழிவாங்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யக் கோரி இன்று (2) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, உறுப்பினர்கள் சந்திரசிறி ஜயதிலக மற்றும் சந்திரா பெர்னாண்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் 17-21 இல் அவருக்கு எதிராக செய்யப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை அமல்படுத்துவதை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஐ.தே.க தலைவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
விதானபத்திரன சட்ட நிறுவனத்தின் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆணைக்குழு தனது விசாரணைகளை நடத்திய விதம் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்று குறிப்பிடுகிறார்.