இன்று (2) பாடசாலைகளிற்கு செல்ல வேண்டாமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,
பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையை சுட்டக்காட்டிய மத்திய கல்வி அமைச்சின் செயலாளருடைய தெளிவில்லாத சுற்றறிக்கையாலும், முன்னுக்குப்பின் முரணான வெளியீடுகளாலும் அதிபர்களும், ஆசிரியர்களும் ஏன் கல்வி உயர் அதிகாரிகளும் குழம்பிப்போய் உள்ளனர்.
வேறுவிதமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான குழப்பமான சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்வதோடு, அதிபர், ஆசிரியர்களை அவசியமில்லாமல் பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
இதைவிட பாடசாலைகளில் பிள்ளைகள் இல்லாத நிலையில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அழைப்பது பொருத்தமற்றது.
ஆகையால் கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் (மாணவர் வருகையின் பின்னர்) வரும்வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம். என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.