இன்று முதல் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் கடமைக்கு திரும்புகிறார்கள்!

Date:

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று (02) முதல் அனைத்து ஊழியர்களும் வழமை போன்று கடைமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நோக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், வரையறைக்கு உட்பட்ட எண்ணிக்கையிலும் அழைத்து பணிகளை செய்விக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சுற்றறிக்கையின்படி கல்வி, கல்வி சாரா ஊழியர்கள், மாகாண  மற்றும் வலய கல்வி அலுவலகங்களின் அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றுநிருபம் கீழே உள்ளது.

 

 

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்