ஒருவரின் நம்பிக்கை பெறுவது கடினமான ஒன்றாகவும். சில தவறான நடவடிக்கை, பேச்சு காரணங்களால் அவரை நம்புவது சந்தேகத்திற்கு இடமாகிறது.
சிலர் சமூக வலைத்தளம் அல்லது பார்க்கும் அனைவரிடமும் மிக எளிதில் பழகி பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். சிலர் யாரிடமும் பேச தயங்குவர். இது அவர்களின் குணமாக இருந்தாலும், தான் பேசக்கூடிய, பழக்கக்கூடிய நபர்களை எல்லாம் எளிதில் நம்பாதவர்களாக பலர் இருப்பார்கள்.
தற்போதுள்ள கலிகாலத்தில் பிறரை எளிதில் நம்புவதும் கடினம். அப்படி தங்களைத் தவிர பிறரைத் தவிர நம்பாமல் சந்தேகிக்கக்கூடிய ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
மிகவும் சந்தேகம் கொண்ட ரிஷப ராசியினர், மற்றவர்கள் தங்களுக்கேற்றவாறு உண்மையை மாற்றிக் கொள்வதாக நம்புகின்றனர். அதனால் யதார்த்தத்தில் தங்களுக்கு பாதிப்பை தருவதாக நம்புகின்றனர். அதனால் பிறரின் வார்த்தையில் அல்லது செய்கையில் பெரியளவில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். பிறர் தங்களுக்கு ஏற்றவாறு கதையை உருவாக்கிச் சொல்வதாக சந்தேகப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியினர் பரிபூரண வாதிகள். இவர்கள் ஆரம்பத்திலிருந்தே தங்களைத் தாங்களே நம்புவதோடு, தங்களால் மட்டும் தான் முடியும் என நம்பக்கூடியவர்கள். தங்களை விட வேலையை சிறப்பாக யாராலும் செய்ய முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள். மற்றவர்களை நம்பாமல் இருப்பது அதுவும் ஒரு காரணமாக இருக்கும். வேலை அல்லது தங்கள் செயலில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என தாங்களே எல்லா செயல்களையும் செய்ய முனைவர். மற்றவர்களை நம்ப மாட்டார்கள்.
விருச்சிகம்
நேர்மையின் அடையாளமாக பார்க்கப்படும் விருச்சிக ராசியினர் தங்களை விட நம்பிக்கையான, தகுதியான யாரையும் சந்தித்ததில்லை என அவர்களே நம்புகிறார்கள். தங்களுக்கு சரியான நேரத்தில் உதவக்கூடிய அல்லது மனதார நம்பக்கூடிய நபர் யாரும் இல்லை என நினைக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், மற்றவர்களின் உணர்வுகள், வேறு எதையும் மனதில் கொள்ளாமல் தங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பெரும்பாலான நேரத்தில் மற்றவர்களை நம்பாதவர்களாக இருக்கின்றனர்.
மகரம்
மகர ராசியினர் மற்றவர்களால் எந்நேரமும் பாதுகாப்பற்ற சூழல், ஆபத்து ஏற்படும் என நம்புவதால் மற்றவர்களிடமிருந்து தள்ளி இருக்கின்றனர். மற்றவர்களிடம் உதவியை எதிர்பார்ப்புத்து அது கிடைக்காத போது, அதை நினைத்து ஏமாற்றமடைவதை விட, அவர்களை மிக மோசமாகப் பார்த்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளாம் என நினைக்கின்றனர்.
கும்பம்
கும்ப ராசியினர் மற்றவர்களால் பேச்சு, செயலால் காயமடைவதை விரும்புவதில்லை. அதனால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மன நிம்மதியுடன் இருக்க மற்றவர்களை எளிதில் நம்புவதை தவிர்க்கின்றனர்.
தங்களுக்கு நல்லது செய்து கொள்ள தங்களை விட வேறு யாரும் இல்லை, அதனால் மற்றவர்களை நம்புவதை பெரும்பாலும் தவிர்ப்பவர்களாகவே இருக்கின்றனர்.