11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தாத்தா கைது!

Date:

கம்பஹா மாவட்டத்தில் வசித்து வரும் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாத்தா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி அவரது தாய், தந்தை மற்றும் 5 வயது தங்கையுடன் வாழ்ந்து வந்திருந்துடன் பெற்றோர் வேலைக்கும் செல்லும் சந்தர்ப்பத்தில் சிறுமி பாட்டியின் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வருவார்.

கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி சிறுமியின் பெரியம்மாவிற்கு சுகயீனம் ஏற்பட்ட காரணத்தினால் பாட்டி வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில் தாத்தாவை பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமி தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இது தொடர்பில் தெரிவித்துள்ளார். பின்னர் சிறுமியின் தாய் அவரது தந்தையிடம் இது தொடர்பில் விசாரித்த சந்தர்ப்பத்தில் அவரை தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து 62 வயதுடைய குறித்த சிறுமியின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கக்கூடாது’: ட்ரம்பை விமர்சித்த மக்ரோன்!

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களை...

ஈரானின் மிக உயர்ந்த பாலம் குண்டுவீசி அழிப்பு!

ஈரானை குண்டுவீசி "கற்காலத்திற்குத் தள்ளுவோம்" என்று அச்சுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு,...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்