யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவாந்துறை, சோழபுரத்தில் வீடொன்றின் மீது பொற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், அவை புஸ்வாணமாகி விட்டன.
நாவாந்துறையில் புறா வளர்ப்பாளர்களிற்கிடையிலான தகராற்றை தொடர்ந்து ஏற்பட்ட விபரீதங்களால் ஒரு இளைஞன் உயிரை மாய்த்ததாக உறவினர்களால் குற்றம் சுமத்தப்படுகிறது.
16 வயதான இளைஞன் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து இளைஞர் குழு தாக்கியதை தொடர்ந்து இந்த விபரீதம் ஏற்பட்டது.
அந்த வீட்டிலேயே பின்னர் பெண்களிடம் அடி வாங்கி மன்னிப்பு கேட்க இளைஞர்கள் சென்றனர். அங்கு மிளகாய்த்தூள் வீசி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சர்ச்சையையடுத்து வீட்டிலிருந்தவர்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை அவர்கள் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை அவதானித்துள்ளனர்.
3 பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ட போதும், அவை வெடிக்கவில்லை.
வீட்டின் வெளி தகரக் கதவு வாளால் வெட்டப்பட்டு, தீ மூட்டப்பட்டுள்ளது.




