28.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
ஆன்மிகம்

ஞாபகத் திறன் அதிகரிக்க உதவும் ஜோதிடம்

ஞாபகத் திறன் அதிகரிக்க ஜோதிடம் கூறும் எளிய வழி

ஞாபகத் திறன் அதிகரிக்க, புத்திக்கூர்மை அதிகரிக்க நாம் தினமும் புதன் பகவானை வழிபடவும். விநாயகரை வழிபடுவதும், ஓம் நமசிவாய மந்திரம், துர்கை மந்திரம் உச்சரிப்பது அவசியம்.புதனின் அருளால் மனதில் பயம் நீங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உங்கள் மனம் அமைதி அடையும்.

பலரும் குழந்தை வரத்திற்காகப் பல விரதம் மேற்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொருவருக்கும் பிறக்கும் குழந்தை இறைவன் அளித்த பரிசு எனலாம். அப்படி பிறக்கும் குழந்தை கூர்மையான அறிவு, செயல்திறன், ஞாபக சக்தி என பெற்றிருப்பது நாம் செய்த புண்ணியமும், குழந்தையில் பிறப்பிலேயே இறைவன் வழங்கிய பரிசு என கூறலாம்.
ஒரு நபர் தனது வாழ்வில் சிறந்து விளங்க, அது நிம்மதியாக இருந்தாலும், நிதி நிலையாக இருந்தாலும் மேம்பட்டிருக்க குடும்பம் மற்றும் தன்னுடைய வேலை அல்லது தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு அவருக்கு எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அறிவு, புத்திக் கூர்மை, வேகமாக செயல்படும் விதம் என பல விஷயங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்.

மிகவும் திறமைசாலியான ராசிகள் – இவர்களின் மூளை எப்படி எல்லாம் வேலை செய்யும் தெரியுமா?

இவை அனைத்தையும் தருபவர் நவகிரகங்களில் ஒருவரான புதன் பகவான். ஜோதிட ஆலோசனையின்படி ஞாபகத் திறன் அதிகரிக்க, புத்திக்கூர்மை அதிகரிக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.

புதன் தோஷ பரிகார மந்திரம்

தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்ற மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும். இதனால் புதன் பகவானின் அருள் கிடைப்பதோடு, உங்களுக்கு கூர்மையான அறிவும், எதையும் சமாளிக்கக்கூடிய மன நிலையும் உண்டாகும்.

மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் வாஸ்து குறிப்புகள்…

விநாயகர் வழிபாடு

புதன் பகவானுக்குரிய ரத்தினம் மரகதம். மரகதம் பதித்த ஏதேனும் ஒரு ஆபரணத்தை புதன் கிழமைகளில் விநாயகர் சன்னதியில் வைத்தும், அறுகம்புல் சாற்றி வழிபட்டு அதை அணிந்து கொள்ளுங்கள். புத்திக்கூர்மையை அளிக்கக்கூடிய மரகதம் அணிவதாலும், விநாயகர் வழிபாடும் நற்பலனைத் தரும்.

விநாயகருக்கான அற்புத மந்திரங்கள்

சிவ மந்திரம்
தினமும் குளித்த பிறகு குறைந்தது 10 அல்லது 15 நிமிடங்கள் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். இதன் மூலம் உங்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். மனதில் புதிய யோசனைகள் மலரும். ஓம் நமசிவாய மந்திரம் புத்திக்கூர்மை தருவது மட்டுமல்லாமல், நம் மனதுக்கு நிம்மதி அளிக்கும்.

ஸ்ரீ துர்க்கை அம்மனின் துர்காஷ்டகம் பாடி அன்னையின் அருள் பெற்றிடுங்கள்

துர்க்கை போற்றி

துர்க்கை அம்மனை வழிபடுவது, துர்க்கை போற்றி மந்திரத்தை உச்சரிப்பதால், நம் புத்தி கூர்மையாகும். மனதில் பயம் நீங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உங்கள் மனம் அமைதி அடைய தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மன் போற்றி மந்திரத்தை உச்சரிக்கவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment