28.1 C
Jaffna
June 27, 2022
மருத்துவம்

வேப்பிலையின் பக்கவிளைவுகள் என்ன? யாருக்கு ஆபத்து அதிகம்!

வேப்பிலையின் பக்கவிளைவுகள் என்ன? யாருக்கு ஆபத்து அதிகம்!

வேம்பு என்னும் வேப்பிலை ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதன் அதிகப்படியான பயன்பாடு பக்கவிளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விளைவுகள் சமயங்களில் ஆபத்தை உண்டாக்கவும் செய்யும். வேப்பிலையின் பக்கவிளைவுகள் மற்றும் சரியான அளவு விகிதம் என்பவை என்ன என்பதை குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

வேப்பிலையின் பக்கவிளைவுகள் குறித்து பார்க்கும் போது அதன் நன்மைகள் குறித்தும் சுருக்கமாக தெரிந்துகொள்வோம். வேப்பிலை மரம் ஆகும். இதன் பல்வேறு பாகங்களும் வெவ்வேறு மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

தொழுநோய் கண் வியாதி, வயிற்று கோளாறு, கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க வேப்பிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பட்டை முதன்மையாக மலேரியா, புண்கள் மற்றும் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலை பூ பித்தத்தை குறைக்கவும் கபத்தை கட்டுப்படுத்தவும் குடல் புழுக்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பழம் மூல நோய், கபம், காயங்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இருமல், சிறுநீர் கோளாறுகள் மற்றும் குடல் புழுக்களுக்கு வேம்பு கிளைகள் பயன்படுத்தப்படுகின்றன. வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பல் துலக்குவதற்கு மாற்றாகவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

வேப்பிலையின் சாறு மிகவும் பயனுள்ள டோனர்கள் மேலும் இது அஸ்ட்ரிஜெட்களில் ஒன்றாகும். பேன்களுக்கு சிகிச்சையளிக்க வேம்பு உதவுகிறது.

பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் வேம்பு பல பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது. அது குறித்து தெரிந்துகொள்வோம்.

தினந்தோறும் வேப்ப இலைகளை மூன்று வாரங்கள் தொடர்ந்து எடுப்பதன் மூல அவர்களுக்கு ஒவ்வாமை தொடர்பு ஸ்டோமாடிடிஸ் அதாவது வயிறு வீக்கம் பற்றி ஆய்வு ஒன்று விவாதிக்கிறது.

ஒவ்வாமை மற்றும் தடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க வேம்பு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகப்படியான பயன்பாடு ஒவ்வாமைக்கு வழிவகுக்கும். வேப்பங்கொட்டைகளை பயன்படுத்துவது பிற ஒவ்வாமைகளை மேலும் புரிந்து கொள்ள ஆய்வுகள் தேவை

வேப்பிலை எலி மீது ஆய்வுகள் மேற்கொண்டதில் வேப்பம் பூவின் சாறு அண்டவிடுப்பை ஓரளவு தடுத்தது கண்டறியபட்டது. தேவைப்படும் போது சிறிய அளவில் ஆண்டி பெரிலிட்டியாக பயன்படுத்தலாம் என்றாலும் அது கருவுறுதலை குறைக்கலாம்.

எலிகள், முயல்கள் மற்றும் பன்றிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வேப்பம்பூ ஆணின் கருவுறுதலை குறைப்பதாக கண்டறியப்பட்டது. ஆண் எலிகளில் இந்த குறைப்பு ஆறு வாரங்களில் 67% ஆக இருந்தது. எனினும் வேம்பு விந்து உற்பத்தியை நிறுத்துவதாக தெரியவில்லை. ஆறு வாரங்களின் முடிவில் வேம்பு முயலுக்கு 90% விந்து இறப்பை ஏற்படுத்தியது.

வேப்ப பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அது பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை உண்டாக்குவதாக சில வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் பூச்சிக்கொல்லிகள் வெளிப்படுத்தும் இந்த வேம்பு மனிதர்களுக்கும் பொருந்தும் இது விந்தணுக்களின் திசையை சீர்குலைத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதாக சொல்கிறார்கள். எனினும் இது குறித்து ஆராய்ச்சி குறைவு.

வேம்பின் சாறு விலங்கு குறித்த ஆய்வில் கருப்பை சுருக்கத்தை தூண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கொறித்துண்ணிகள் மற்றும் குரங்குகள் இரண்டிலும் பார்க்ககூடிய பக்கவிளைவுகள் இல்லாத கர்ப்பத்தை நிறுத்துவதாக அறியப்படுள்ளது. கருக்கலைக்க விரும்புவர்களுக்கு இது விரும்பத்தக்கதாக இருக்கலாம். ஆனால் கருத்தரிப்பை எதிர்கொள்பவர்கள் வேம்பு எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.

சில கோட்பாடுகள் வேப்பிலை எடுக்கும் போது அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிவேகமாக மாற்றக்கூடும் என்று சொல்கின்றன. ஆனால் இது விந்தணுக்களை நிராகரிக்கவும், கருப்பையிலிருந்து கருவை வெளியேற்றவும் செய்யலாம். எனினும் இது குறித்த ஆய்வுகள் தேவை.

சீன மூலிகை மருந்தை எடுத்துகொண்ட பிறகு ஒருவருக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாக ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. மருந்து அறிக்கையில் வேப்பம் பூ முதன்மையாக பொருள்களில் ஒன்றாக இருந்தது.

வேப்பிலை உட்கொள்வது சிறுநீரக பாதிப்புக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கவனமாக இருப்பதும் முக்கியம். மூலிகை மருந்துகளை பொருத்தவரை இதன் நச்சுகள் சிறுநீரகத்தை தொடர வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வேப்பம் பூவை அதிகமாக உட்கொள்வது கல்லீரலையும் சேதப்படுத்தும் என்று நம்புகிறார்கள். எனினும் இதற்கு நம்பத்தகுந்த ஆய்வுகள் இல்லை. ஆனால் கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் வேப்பிலை எடுத்துகொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

வேப்பத்தின் ஹைபோடென்சிவ் விளைவுகள் விரும்பத்தகாத தோன்றினாலும் நீங்கள் இரத்த சர்க்கரையை குறைப்பதற்கான மருந்துகளை எடுப்பதாக இருந்தால் வேப்பத்தை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் சிறிய அளவு பரிந்துரைகப்படுகிறது. ஆனால் அதிகமாக எடுத்துகொள்ளும் போது இரத்த சர்க்கரை வீழ்ச்சியடையலாம். இது தலைச்சுற்றல் மற்றும் பலவீனத்தை உண்டாக்கலாம்.

வேம்பு எண்ணெய் குழந்தைக்கு நஞ்சாக இருக்கலாம். வேப்ப எண்ணெய்இல் இருக்கும் அசுத்தம் இந்த விளைவுகளை உண்டாக்கலாம். இந்த நஞ்சு குழந்தையை உயிரிழப்பு வரை கூட கொண்டு செல்ல வாய்ப்புண்டு.

எனினும் இது குறித்து அதிக ஆராய்ச்சி தேவை. வேப்ப இலைகள், சாறுகள் நீண்ட காலம் எடுத்துகொள்ள கூடாது. ஏனெனில் வேப்ப இலையை தேநீராக்கி குடித்த நோயாளிகளில் சிலருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாக நிகழ்வுகள் தெரிவிக்கின்றன.

வேப்ப எண்ணெயில் இருக்கும் பொருள்கள் குழந்தைகளில் ரெய்ஸ் நோய்க்குறியின் அறிகுறிகளை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. மிக சிறிய மருந்தை உட்கொள்வது குழந்தைக்கு ஆபத்தானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொரோனா குணமானாலும் தொடரும் உடல் உபாதைகள்..

divya divya

மாஸ்க்கைத் துவைக்காமல் பயன்படுத்துவதால் ஏற்படும் வேறு நோய்கள்

divya divya

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!