2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் எலெய்ன் தொம்ப்சன் தங்கப்பதக்கம் வென்றார்.
இரண்டாம், மூன்றாம் இடங்களையும் ஜமெய்க்கா வீராங்கணைகளே வென்றனர்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் 100 மீற்றர் பந்தயத்தில் தங்கம் வென்ற எலெய்ன், டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார்.
பந்தய தூரத்தை 10.61 விநாடிகளில் கடந்தா். அமெரிக்காவின் ஓட்டப்பந்தய நட்சத்திரம் ஃப்ளோரன்ஸ் கிரிஃபித்-ஜாய்னர், 1988 இல் நடந்த ஒலிம்பிக்கில் 10.49 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது.
இன்று 29 வயதான எலெய்ன் எடுத்துக் கொண்ட நேரம், ஒலிம்பிக் மகளிர் பந்தயத்தில் இரண்டாவது அதிவேக சாதனையாகும்.
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-ப்ரைஸ் இரண்டாமிடத்தையும், ஷெரிக்கா ஜாக்சன் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.
தங்கம் வெல்லக்கூடியவர்கள் பட்டியலில் இருந்த டினா ஆஷர்-ஸ்மித் இறுதி பந்தயத்தில் காயம் காரணமாக விலகினார். அவர் கதறியழுதபடி மைதானத்திலிருந்து வெளியேறினார்.