நேற்றைய தினம் (9) வாளுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் (30) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக ஏற்கனவே ஒரு தடவை நீதிமன்றத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1