மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் இன்று காலை 10.30 மணியளவில் காணமாமல் ஆக்கபட்ட தமது உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி கவனவீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவிர்கள் சுமார் 30 பேர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன். ‘எமது உறவுகள் எங்கே?’ ‘எமது உறவுகளைத்தேடுவது தேசவிரோமதா?’ ‘எனது உறவுகள் எமக்கு வேண்டும்.’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளுடன் கவணஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள் நாம் போராடும் இப் பல்கலைக்கழகத்தில் வைத்து எமது பிள்ளைகளை பிடித்துச் சென்றனர்.
அவர்களுக்கான முடிவு இதுவரையில் இல்லை. இதே அரசாங்கம்தான் அப்பொது பிடித்துச் சென்றது. அரசு எமக்கான முடிவைச் கூறுவதாக இல்லை. எமது உறவுகளைத் தேடாத இடம் இல்லை ஆகையால் சர்வதேசம் எமக்கு பதில் தரவேண்டும். ஜெனிவா எங்களுக்கு ஏதாவது ஒரு முடிவு தந்தேஆகா வேண்டும். எனவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்