கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1