முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் மனைவியின் மற்றுமொரு சகோதரரும் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறைச்சென்றுள்ளார்.
குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவர், 2007ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, தண்டனைக்காலம் நிறைவுற்றதன் பின்னர் விடுதலையாகியுள்ளார் என சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ஏற்கனவே வேலை செய்த சிறுமியை ரிஷாட்டின் மற்றுமொரு மைத்துனரான மொஹமட் ஹனீஸ் என்றழைக்கப்படுபவரே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, ரிஷாத் பதியுதீனின் மாமனார் மீதும் பணிப்பெண்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுமென சிங்கள ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.