குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு!
உங்களுக்குதான் இந்த விஷயம்! நோயில்லாத வாழ்வை உங்கள் குழந்தைகளுக்கு தர விரும்பினால் இந்த உணவுமுறைக்கு மாறுங்கள்
உங்களுக்குதான் இந்த விஷயம்! நோயில்லாத வாழ்வை உங்கள் குழந்தைகளுக்கு தர விரும்பினால் இந்த உணவுமுறைக்கு மாறுங்கள்.
எந்தவித ரசாயன உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் இல்லாம. மிக இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகள் என்றாலே ஆனிக் உணவுகள். இப்போது எல்லாரிடமும் இதைப் பற்றி ஆர்வமும் வாங்கும் முனைப்பும் மேலோங்கி உள்ளது.
ஆனால் இயற்கையான ஆர்கானிக் உணவுகளை உண்பதைக் குறித்து நீங்கள் உண்ணலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தால் இந்த பகுதியில் இதனைக் குறித்த முழு பலன்களையும் விவரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக உங்கள் குழந்தைகள் தற்போது உண்ணும் உணவிலிருந்து இயற்கை உணவுக்கு மாற்ற எண்ணியிருந்தால் இந்த விவரம் நீங்கள் கண்டிப்பாகப் படித்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
பின்வரும் காரணங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏன் இயற்கை உணவு சிறந்தது என்பதற்கான புரிதலை உங்களுக்குத் தரும். மேலே படியுங்கள்.
ஆர்கானிக் உணவுகள் ஊட்டச் சத்து மிகுந்தவை :
குழந்தைகளுக்கு தேவையான அளவு கனீமத் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் முழுவதுமாக இந்த ஆர்கானிக் உணவுகளில் கிடைக்கும்.
ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்களில் சத்துக்கள் மட்டுப்பட்டிருக்கும் ரசாயனம் மேலோங்கியிருக்கும். மேலும் இயற்கை உணவின் சுவை அதிகம் என்பதால் உங்கள் குழந்தைகள் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் விரும்பி உண்பர்.
இயற்கை உணவுகளில் நச்சுக்கள் இல்லை :
ஒரு ஆய்வின் படி வழக்கமாக செய்யப்படும் உணவு உண்ணும் குழந்தைகளை ஒப்பிடும்போது இயற்கை உணவு மற்றும் பால் பொருட்களை உண்டுவரும் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மூச்சிரைப்பு மற்றும் தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகக் காணப்படுகின்றன.
இந்த ஆய்வு ஆஸ்துமா நோயினால் அதிகம் குழந்தைகள் பாதிக்கப்படும் இந்த உலகில் குழந்தைகளுக்கு இயற்கை உணவே சிறந்தது என்று உறுதிப்படுத்துகிறது.
ஆரோக்கியமான மனநலம் :
இயற்கை உணவுகள் உங்கள் குழந்தையின் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மன அழுத்தம் மற்றும் கவனக் குறைபாடுகளால் அவதியுறும் குழந்தைகளுக்கு இயற்கை உணவுகள் மிகவும் உகந்தவை.
இயற்கை உணவுகளை உண்ணும் குழந்தைகள் அறிவுக்கூர்மை, சுறுசுறுப்பு மற்றும் கடின உழைப்பில் சாதாரண உணவு உண்ணும் குழந்தைகளில் இருந்து மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
கவனக் குறைபாட்டுப் பிரச்னையை குறைக்கிறது
ஏடிடி எனப்படும் கவனக்குறைபாட்டுப் பிரச்சனை குழந்தைகளிடையே பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். எனினும் பெரும்பாலான பெற்றோருக்கு இவற்றின் பக்கவிளைவுகளை பற்றிய பயமும் உள்ளது. கவனக் குறைபாடுள்ள உங்கள் குழந்தைகளுக்கு இயற்கை உணவுகளை அளித்து வந்தால் இந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாகக் காணமுடியும்.
இயற்கை உணவுகளில் பூச்சிக் கொல்லிகள் குறைவு
பதப்படுத்தப் பட்ட உணவுகளை ஒப்பிடுகையில் இயற்கை உணவுகள் குறைந்த அளவு பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேதிப்பொருட்களைக் கொண்டிருப்பதால் அவை உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை.
சர்க்கரையின் அளவு குறைவு
இயற்கை உணவு உட்கொள்வது என்றாலே சர்க்கரையற்ற அல்லது குறைவான சர்க்கரை கொண்ட உணவையே உட்கொள்ளுகிறீர்கள் என்பதால் இது உங்கள் குழந்தைகளுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது.
எல்லா இயற்கை உணவுகளும் உங்கள் குழந்தைகளுக்கு நல்லதா?
கடைகளில் நூற்றுக்கணக்கான இயற்கை தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகள் உங்கள் கண்களில் படும். ஆனால் அது உங்கள் குழந்தையின் ஆகாரத்தில் எந்த ஒரு பலனையும் ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுபோன்று இயற்கை காய்கறி மற்றும் பழங்களில் அதிக கவனம் செலுத்தி அவற்றைக் கொண்டு குழந்தைகளுக்கான தின்பண்டங்களை வித விதமாக செய்து கொடுக்கலாம்.
அதனால் மேலும் காத்திருக்காமல் இன்றே இயற்கை உணவிற்கு மாறுங்களேன்!