யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) காலையில் படுக்கையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அநுராதபுரத்தை சேர்ந்த சார்ஜண்ட் ஜயசேகர (40) என்பவரே சடமாக மீட்கப்பட்டார்.
நேற்று இரவு கடமையை முடித்து விட்டு, யாழ்ப்பாணம், பண்ணையிலுள்ள பொலிஸ் தங்குமிடத்திற்கு சென்று உறக்கத்திற்கு சென்றார். இன்று காலையில் கடமைக்கு செல்வதற்காக காலை 5.30 மணியளவில் சக பொலிஸ் உத்தியோகத்தர்களால் தட்டியெழுப்ப முயன்ற போது, அவர் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1