மன்னார் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

மன்னார் மாவட்டத்தில் மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் நேற்று திங்கட்கிழமை(26) மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 976 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது மேலும் 17 பேரூக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை 167 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மொத்தம் 959 தொற்றாளர்களும் , தற்போது வரை 976 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் தற்போது வரை 2,341 பீ.சி.ஆர்.பரிசோதனைகளும், தற்போது வரை 24 ஆயிரத்து 617 பீ.சி.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்