விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் நடித்த அருண்பிரசாத் மற்றும் ரோஷினி ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
சமூக வலைதளத்தில் இவர்களது நடிப்பு பற்றி அதிகப்படியான மீம்ஸ்கள் வெளியாகின. அதனை அப்படியே சாதமாக பயன்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு சமூகவலைதளத்தில் பாரதி கண்ணம்மா மீது வெறுப்பு கலந்த வரவேற்பு உருவானது.
இந்த சீரியலில் ஒரு சில காட்சிகளை பார்க்கும் போது நமக்கு வெறுப்பை தாண்டி இதெல்லாம் நம்பகத்தன்மை இல்லை என்பது வெளிப்படையாக தெரியும். ஆனால் ரசிகர்கள் என்ன செய்வார்கள் இவர்கள் எடுக்கும் காட்சிகள் மட்டும் தானே பார்க்க முடியும் என்பதனாலேயே இதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படாமல் சீரியலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பாரதிகண்ணம்மா சீரியல் நடித்துவரும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எப்போதும் சீரியல்களில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்திற்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பது வழக்கம் தான் அப்படி இந்த சீரியலில் 2 பேருக்கு மட்டுமே அதிகப்படியான சம்பளம் கொடுக்கப் பட்டுள்ளது.
அருண் பிரசாத் – ரூ 20000
ரோஷினி – ரூ 20000
ரூபாஸ்ரீ – ரூ 15000
ரிஷிகேஷ்வ் – ரூ 12000
பரினா – ரூ 10000
அகிலன் – ரூ 10000
கண்மணி – ரூ 9000
செந்தில்குமாரி – ரூ5000