கரவெட்டி சுாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் கலந்து கொண்ட 49 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு அண்மையாக உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழா இடம்பெற்றது.
ஆலய திருவிழாக்களில் கலந்து கொள்பவர்களிடம் எழுமாற்றாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் அடிப்படையில், இந்த ஆலயத்தின் திருவிழாவுடன் தொடர்புடைய பக்தர்கள் 179 பேரிடம் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 49 பேருக்கு தொற்று உறுதியானது.
தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் இன்று அடையாளம் காணப்பட்டு அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்படும். இதன்பின்னர், இந்த பகுதியை முடக்குவதா என முடிவு செய்யப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
1
+1
2
+1
1