இனி அமெரிக்க ஸ்டைல்தான்: கோட்டா உருவாக்கிய புதிய திட்டம்!

Date:

அமெரிக்க ஜனாதிபதிகள் கலந்து கொள்ளும் ஊடக சந்திப்பு அறைகளின் பாணியில், இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் அமைத்துள்ளார். ஜனாதிபதியும், ஊடக தொடர்பாளரும் இங்கு ஊடகவியலாளர் சந்திப்புக்களில் ஈடுபடுவார்கள்.

தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலலாளர்கள் அங்கு பிரசன்னமாகி ஜனாதிபதியிடம் அல்லது ஜனாதிபதியின் ஊடக தொடர்பாளரிடம் கேள்வியெழுப்ப முடியும்.

ஊடகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் இந்த மாநாட்டு அறை பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடக தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

அங்கு வாராந்த பத்திரிகையாளர் சந்திப்புகள் நடைபெறும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவார்கள்.

புதிய ஜனாதிபதி ஊடக மையம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டு தேவையான அனைத்து தகவல்களும் ஊடக சந்திப்புகளின் போது கிடைப்பதை உறுதி செய்யும்.

அமெரிக்க ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்கு சிறப்பு ஊடக அறை இயங்கி வருகிறது. அங்கு ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் தினசரி பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துகிறார். அதே நேரத்தில் ஜனாதிபதி சிறப்பு சந்தர்ப்பங்களில் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்