மாலை சந்தை பிள்ளையாரிடம் வந்த பெண்… பருத்தித்துறை நகரில் 11 பேருக்கு தொற்று!

Date:

மாலைசந்தை பிள்ளையார் ஆலயத்தில் திருவிழாவில் கலந்து கொண்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  4 பேருக்கான பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகாத நிலையுடன்? இன்று ளெியான முடிவுகளின் அடிப்படையில் ஏனைய மூருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது.

ஆலயத்தில் திருவிழா காலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது செயற்பட்டமை பலரின் முகநூல் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட போதிலும் கடந்த சனிக்கிழமை 79 பேருக்கே PCR மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 பேரினது முடிவுகள் மட்டும் வெளியாகாத நிலையில் இருந்தது ஏனையோருக்கு தொற்று ஏற்படவில்லை எனவும் முடிவுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 பேரின் முடிவுகளும் இன்று வெளியாகின. இதில் ஆலயத்தில் திருவிழா காலங்களில் தொண்டு செய்கின்ற பெண் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறையில் முடக்கப்பட்ட பகுதியை விடுவிக்கும் நோக்கத்துடன் அந்த பகுதிகளில் இன்று 395 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 11 பேருக்கு தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்